காமராசரின் வாழ்க்கை வரலாறு | Kamarajar history in tamil

பிறப்பு :

Kamarajar history in tamil – 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டி என்னும் கிராமத்தில் குமாரசாமி சிவகாமி தம்பதிக்கு மகனாய் பிறந்தார் காமராஜர்.

பெயர் காரணம் :

தங்களது குலதெய்வ பெயரான காமாட்சி என்ற பெயரையே பெற்றோர் காமராஜருக்கு சூட்டியனர்.பெற்றோர் ராஜா என்று செல்லப் பெயராக அழைத்ததால் அக்கம்பக்கத்தினரும் அப்படியே அழைக்க காமாட்சி எனும் பெயரானது காமராஜர் என்றானது.

பள்ளி வாழ்க்கை :

Kamarajar Biography in Tamil -அந்தக் காலத்தில் நீதி கட்சி தான் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சி என்பதால் எங்கெல்லாம் நீதி கட்சியின் கூட்டம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் எதிர் கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வதே காமராஜர் வழக்கமாக கொண்டிருந்தார்.

பள்ளிப்படிப்பில் பெரும் ஆர்வத்தைக் காட்டி வந்தார் காமராஜர். அப்பொழுது திடீரென்று ஒரு அதிர்ச்சி செய்து வந்தது,அதுவே அவர் தந்தை குமாரசாமியின் மரணம் ஆகும்.

அரசியல் வர காரணம் :

இதன் காரணமாய் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு குடும்ப வறுமையை ஈடுகட்ட வெளி வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.அப்பொழுது காமராஜரின் தாய்மாமன் கருப்பையா தான் குடும்பத்திற்கு உதவி செய்தார். அவர் நடத்தி வந்த துணிக்கடையில் தான் வேலை தந்தார்.

Kamarajar history in tamil -அந்தத் துணிக்கடையையே காமராஜருக்கு அரசியலை கற்றுத் தந்தது.சுதந்திர போராட்டம் உச்சந்தொட்ட காலம் கட்டம் என்பதால், பொதுக்கூட்டம் வாயிலாக சுதந்திர உணர்ச்சியை மக்களுக்கு கொண்டு சேர்த்திருந்தன.

அந்த வீட்க்கை காமராஜரையும் தொற்றிக் கொண்டது. வரதராஜலு நாயுடு,சத்தியமூர்த்தி, திரு வி போன்றோரின் சுதந்திரத்தை நோக்கிய பேச்சு காமராஜருக்குள் அரசியல் ஆர்வத்தை தூண்டியது.

சிறப்பு பெயர்கள்:

தெற்கு காந்தி
படிக்காத மேதை
கர்மவீர்
பெருந்தலைவர்
காமராஜர் ஒரு திறந்த மனதுடைய கல்வியாளர்
Kamarajar history in tamil

கட்சி தொண்டன் காமராஜர் :

Kamarajar Biography in Tamil -காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்கு செல்வது காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை கேட்பது என்று இருந்த காமராஜர் ஒரு கட்டத்தில் நேரடி அரசியலில் ஈடுபட காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சிக்கு கொடி கட்டுவது தொடங்கி மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிப்பது வரை கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்தார்.

இதனை காரணம் காட்டி கட்சியில் முக்கிய பொறுப்பையும் பெற்றார்.ஆனால் அரசியலில் ஈடுபடுவதால் காமராஜரின் எதிர்காலம் வீணாகி விடுமோ என்று அச்சப்பட்ட குடும்பத்தினர்கள் காமராஜரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கே ஒரு மரக்கடையில் வேலை செய்தாலும் அங்கேயும் கட்சி வேலை செய்வதாக குடும்பத்திற்கு செய்தி வர அவரை மீண்டும் சொந்த ஊருக்கே வரவைத்து விட்டனர். இன்சுரன்ஸ் ஏஜென்சி வேலை பெற்று தந்தாலும் காமராஜரின் விருப்பம் முழுவதும் அரசியல் மீதே இருந்தது.

திருமணம் செய்து வைத்தாலும் குடும்பத்தை சுற்றியே இயங்குவார் என எண்ணினாலும் அந்த வாய்ப்பை அடியோடு நிராகரித்த காமராஜர் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

சிறை வாழ்க்கை :

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான உப்பு சக்தி என்ற மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாட்டிலும் மிகச் சிறப்பாக நடந்த போது அந்தப் போராட்டத்தில் இளைஞராக கலந்து கொண்டு சிறை சென்றார் காமராஜர்.இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார் காமராஜர்.

அதுவே தன் வாழ்க்கையில் முதல் முறையாய் சிறைவாசம் கண்டார் காமராஜர்.சிறையில் இருந்து வெளிவந்த பிறகு காந்தியும் காங்கிரஸ் கட்சியும் கலந்து நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார் காமராஜர்.

அனைத்து போராட்டத்திலும் கலந்து கொண்டதால் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பில் இருந்து மாநில பொறுப்பிற்கு உயர்ந்தார் காமராஜர். சென்னை மாகாண காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் என்ற பதவியானது அவருக்கு கிடைத்தது.

கட்சியில் காமராஜருக்கு செல்வாக்கானது உயர விருதுநகர் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்தார் என்று அவர் மீது வெடிகுண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வெற்றி பாதை :

காங்கிரஸ் தலைவர்களின் சட்ட ரீதியான வழக்கால் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் காமராஜர்.அதனைத் தொடர்ந்து காமராஜரின் அரசியல் பாதையில் தொடர்ந்து ஏர்முகம் தான்.1936 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சத்தியமூர்த்தி தலைவராகவும் காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல் தேர்தல் :

Kamarajar history in tamil -1937 இல் தான் காமராஜர் முதல் முதலில் தேர்தலை சந்தித்தார்.அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பை தந்தார் தலைவர் சத்தியமூர்த்தி.சொந்தத் தொகுதியில் போட்டியிட்ட காமராஜரை எதிர்த்து யாரும் வேட்பாளராக நிற்கவில்லை என்ற காரணத்தினால் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் நுழைந்தார்.

அன்று முதல் கட்சிப் பணி மக்கள் பணி என்று சுற்றி சுழன்று செயல்பட்டார்.இதன் காரணமாகவே 1940 இல் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் காமராஜர்.அந்த சமயத்தில் நடந்த போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு இருந்த காமராஜர் தேர்தலில் வெற்றி பெற்றார் காமராஜர்.

சொந்தக் கட்சியினரே வியந்தனர்:

ஆங்கிலேயர் அரசுக்கு எதிராக 1942 ஆம் ஆண்டு காந்தி ஆகஸ்ட் புரட்சியை அறிமுகம் செய்தார். அந்தப் போராட்டத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு பம்பாய் சென்றார் காமராஜர்.

அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆவணங்களை ரயில்வே வழியாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து காங்கிரஸ் தொண்டர்களிடம் சேர்த்தார். கட்சிக்காக எப்பேர்வு ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராக இருந்த காமராஜரை கண்டு சொந்தக் கட்சியினரே வியந்தனர்.கட்சியில் காமராஜருக்கு இருந்த மதிப்பு மென்மேலும் உயர தொடங்கின.

தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் வந்த காந்தி அர்ஜியின் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதினார்.அதில் ராஜாஜிக்கு எதிராக ஒரு குழு செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றிய காமராஜர் தான் வகித்து வந்த ஆட்சி மன்ற குழு பதவியை ராஜினாமா செய்தார்.காந்தியை எதிர்த்து காமராஜரின் இந்த துணிவை கட்சிக்குள் காமராஜரின் மதிப்பை உயர்த்தியது.

கிங் மேக்கர் :

Kamarajar history in tamil -1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் அருப்புக்கோட்டை பகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் காமராஜர்.அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக முத்துரங்கரை முன்முகழ்ந்தார் காமராஜர்.

ஆனால் தீ பிரகாசம் என்றவரே வெற்றி பெற்றார். ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் காமராஜரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை பொறுப்பேற்காமலையே இருந்தார்தீ பிரகாசம்.இதனால் கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் குழப்பம் ஏற்பட தொடங்கியது.முதலமைச்சர் பிரகாசத்திற்கு எதிராக அடுத்தடுத்து அதிர்ச்சி குரல்கள் எழும்ப தொடங்கின.இதன் விளைவாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பிரகாசம். இதன்பின் நடந்த சட்டமன்ற குழு தேர்தலில் காமராஜர் நிறுத்திய ஓமந்தூர் ராமசாமி வெற்றி பெற்று முதல்வாரானார்.

இங்கிருந்தே காமராஜரின் கிங்மேக்கர் ஆட்டமானது தொடங்கியது. இதுவே லால் பகதூர் சாஸ்திரி,இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்க பயணம் தொடங்கியது. சட்டமன்றத்தில் சுவாரசியமாக உரையாற்றுவது கைதட்டல்களை பெறுவதெல்லாம் காமராஜருக்கு துளியும் விருப்பமில்லை.

மாறாக மக்களுக்காக வேண்டிய திட்டங்களை நோக்கி கவனம் செலுத்தினார்.அதே சமயம் கட்சி பணிகளிலும் காமராஜரின் ஆர்வம் உயர்ந்து கொண்டே இருந்தன. நேர்மையான முதலமைச்சராக இருந்த போதும் ஓமந்தூர் ராமசாமிக்கு கட்சியிலேயே பலரும் போர்க்கொடி தூக்க ஓமந்தூராரை பதவி விலக செய்துவிட்டு அவருக்கு பதிலாக பி எஸ் குமாரசாமி ராஜாவை முதலமைச்சர் ஆக்கினார் காமராஜர். இதன் மூலமாக இரண்டாவது முறையாக கிங்மேக்கர் ஆகியிருந்த காமராஜர் கட்சியிலும் ஆட்சியிலும் பெரும் செல்வாக்கு பெற்றார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டிய சூழல் உருவானது.வருபுறம் மைனாரிட்டி அரசை அமைக்க மூத்த காங்கிரஸ் தலைவர்கள் யாரும் முன் வரவில்லை.மறுபுறம் ஆட்சி அமைத்தாலும் அந்த ஆட்சியை தக்க வைப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்தது.அப்போதுதான் அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து இருந்த ராஜாஜி மீண்டும் அரசியலில் இணைத்து முதலமைச்சர் ஆக்கினார் காமராஜர்.

அரசியல் எதிர்க்கும் ஆட்சியை கொடுத்திருக்கிறார் காமராஜர் என்ற பேச்சியும் எழுத்தொடங்கின. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் அமைச்சர் ராஜாஜி புதிய கல்வி திட்டத்தை அறிமுகம் செய்தார்.

பெற்றோர் செய்யும் தொழிலை அவர்களின் வாரிசும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் போல புல கல்வி திட்டம் என்று விமர்சித்த எதிர்க்கட்சிணர்கள் ராஜாஜி கொண்டு வந்து அந்தத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.அத்திட்டத்தில் காமராஜருக்கும் உடன்பாடு இல்லை என்றாலும் திட்டத்தைக் கொண்டு வருவதில் ராஜாஜி பிடிவாதம் காட்டினார். இதனால் கட்சிக்குள் அதுற்ப்த்தி எழவே முதலமைச்சர் பதவியை விளகினார் ராஜாஜி.

காமராஜர் முதலமைச்சர் ஆன கதை :

அடுத்து யாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பார்வை காமராஜர் மீது பட்டது.இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ஏற்க சம்மதித்தார் காமராஜர். ஆனால் அவருக்கு எதிராக ராஜாஜியின் ஆதரவுடன் சி சுப்பிரமணியன் நிறுத்தப்பட்டிருந்தார். போட்டியின் முடிவில் ஸ்ரீ சுப்பிரமணியத்துக்கு 41 வாக்குகள் மட்டுமே கிடைக்க அவரைவிட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகமாக பெற்று 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி முதலமைச்சர் ஆனார் காமராஜர்.

Kamarajar history in tamil – முதலமைச்சருகாக தன்னை எதிர்த்துப் போட்டிக்கு நிறுத்தப்பட்டிருந்த சி சுப்பிரமணியத்தின் அறிவு ஆற்றல் அனுபவத்தை அங்கீகரித்து அவரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் காமராஜர்.அதேபோல தன்னை எதிர்த்து முன்மொழிந்த வேட்பாளர் பச்சவத்தலையும் தன்னுடைய அரசியல் நிர்வாக அனுபவத்தை அங்கீகரித்து அமைச்சராக்கினார் காமராஜர்.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரும் ரெட்டமலை சீனிவாசனின் பேரன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆக்கி பெரும் புரட்சி செய்த காமராஜர் புல கல்வி திட்டத்தை ரத்து செய்தார்.

காமராஜர் முதலமைச்சர் ஆனாலும் அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர் அல்ல.எனவே முதலமைச்சர் பதவியை நீடிக்க குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டார்.புலக்கல்வி திட்டத்தை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்போது புதிதாக தொடங்கப்பட்டிருந்த திமுக காமராஜருக்கு ஆதரவித்தது.

அந்தத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டிருந்த கம்யூனிஸ்ட் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் காமராஜர்.எப்போதும் மக்கள் நலம் பற்றி யோசிக்கும் முதலமைச்சர் என்பதால் கிருஷ்ணகிரி நீர்த்தேக்க திட்டம், அமராவதி நீர்த்தேக்க திட்டம், சாத்தனூர் நீர் திட்டம் புளம்பாடி நீர்த்தேக்க திட்டம் என்று தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து மத்திய அரசிடம் தன்னிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி பல திட்டங்களை கொண்டு வந்தார்.

மதிய உணவு திட்டம்:

Kamarajar history in tamil -காமராஜரின் கருணை உள்ளத்தில் உதித்த அற்புதமான திட்டம் தான் மதிய உணவு திட்டம்.பள்ளிக்கு வரும் ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் காமராஜர். ஒரு கட்டத்தில் மதிய உணவுக்காக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால் கல்வி கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது.இன்றும் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் ஒன்றான இத்திட்டம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.இதன் காரணமாகவே அவர் கல்விக்கண் திறந்த காமராஜர் என்று அழைக்கப்படுகிறார்.

இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் காமராஜர்:

1957-இல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தது சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் காமராஜர்.அந்தத் தேர்தலில் இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் காமராஜர்.

Kamarajar history in tamil -சென்னை கிண்டி அறுவை சிகிச்சை கருவிகள் தொழிற்சாலை, நீலகிரி கச்சா பிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலி பிக்சர்ஸ் தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை,நெய்வேலி நிலக்கரி சுருங்குங்கள்,சேலம் உருக்காலை, சென்னை ஆவடி ராணுவ தளவாடை தொழிற்சாலை,பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, அரக்கோணம் இலகுணகை இயக்கம் தொழிற்சாலை உள்ளிட்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முயன்றார் முதலமைச்சர் காமராஜர்.

மாநில தொழில் வளர்ச்சியில் முதலமைச்சர் காமராஜர் முழிப்புடன் செயல்பட்டார்.இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்பேட்டைகளை நிர்மாணிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 159 நூற்பாலைகள், 30 லட்சம் நுற்ப்புகதிர்கள்,8000 துணி நூட்பு பாவுகள்,அதிக எண்ணிக்கையில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.

சென்னை வண்டலூர் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக ஆண்டுக்கு 3000 கார்கள்,1500 ட்ரக்குகள்,இன்ஜின்கள், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக சின்சன் இந்தியா பிஸ்டன், டிவிஎஸ்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.முக்கியமாக பனியன் கம்பெனிகள் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு அளித்தது.விவசாயிகளின் நிலையை பற்றி அவருக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களுக்காகவே கிராமப்புறத்தில் இணைக்கப்பட்ட மின்சாரத்தில் 70% மின்சாரம் விவசாய மோட்டார் பம்ப்ஷேடுகளை இயக்க பயன்படுத்தப்பட்டது.

Kamarajar history in tamil -1963ல் மொத்தமாக 10,000 விவசாய பம்ப் செட்டுகள் தமிழ்நாட்டு மின்சாரம் கொண்டு விவசாயத்திற்கு இயக்கப்பட்டது. காமராஜர் காலத்தில் ஒரு பக்கம் மக்கள் நலத்திட்டங்கள் தூய்மையாக நடந்து கொண்டிருந்தாலும் சட்டம் ஒழுங்கு சார்ந்த சில பிரச்சனைகள் இருக்கவே செய்தன. அவற்றில் முக்கியமானது முதுகுளத்தூர் கலவரம் தேர்தல் பிரச்சனை தொடர்பாக இரு கட்சிகளில் இருந்த மோதல் இரு சமுதாயத்தினருக்கான மோதலாக மாறியது.

அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு சர்ச்சைக்குள்ளானது.அரசியல் சர்ச்சைகள் ஆயிரம் இருந்தாலும் ஆக வேண்டிய காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருந்தால் காமராஜர்.காமராஜரை அரசியல் களத்தில் ஆவேசமாக குரல் கொடுத்தவர்களும் களமாடியவர்களமே பாராட்டுவதும் போற்றுவதும் என்ற அதிசயம் நிகழ்ந்தது.

மூன்றாவது முறையாகவும் காமராஜரே முதலமைச்சர் :

எதிர்க்கட்சியினர்களும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்திய காமராஜருக்கு 1962 தேர்தலில் வெற்றியை தந்து மூன்றாவது முறையாகவும் காமராஜரே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலமைச்சர் பதவியில் இருந்து நீங்கினார் காமராஜர்:

Kamarajar history in tamil -அதே சமயம் அரசியல் ரீதியாக அவருக்கு கவலை குள்ளானது தேர்தல் முடிவுகள். அந்தத் தேர்தலில் 50 இடங்களை கைப்பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்தின் பிரதான எதிரியாக திமுக உருவெடுத்தது.

அந்த வெற்றியை மற்றவர்கள் எல்லாம் வெரும் வீக்கம் என்று சொன்னபோது, காமராஜர் மட்டுமே திமுக வளர்கிறது என்று துல்லியமாக கணித்தார்.அப்போது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்படுத்தியிருந்தது.

அந்த சரிவில் இருந்து காங்கிரசை மீட்டெடுக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும்,அதுக்கு பதவியில் இருக்கும் தலைவர்களை நீக்கி கட்சி பணிகளில் ஈடுபட வேண்டும் என்றால் காமராஜர்.அந்தத் திட்டத்தை நேருவிடம் சொல்லும்போது அதை ஏற்றுக் கொண்ட நேரு அதற்கு காமராஜர் திட்டம் அதாவது கே பிலேன் என்று பெயரை வைத்தார்.

அதற்காக முதலமைச்சர் பதவியில் இருந்து நீங்கினார் காமராஜர்.காமராஜர் பதவி விலகல் முடிவை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.1954 இல் காமராஜர் தொடர்ச்சியாக முதலமைச்சராக வேண்டும் என்றவர் பெரியார் தான்.

Kamarajar history in tamil – காமராஜரின் ஆட்சியை கண்ணை மூடி ஆதரிக்க வேண்டும் என்றார் பெரியார். பிரச்சார பீரங்கியாக பெரியாரின் விடுதலை பத்திரிக்கை செயல்பட்டது.ஒருவேளை காமராஜர் பதவி விளங்கினால் அதுக்கு காங்கிரஸ் தற்கொலை செய்ததற்கு ஒப்பானது என்றார் பெரியார்.ஆனாலும் கட்சி பணிக்காக முதலமைச்சர் பதவியில் இருந்து விளங்கினார் காமராசர்.

காமராஜா மரணம்:

தன் வாழ்நாளில் மக்களுக்குப் பல சேவைகளைச் செய்த மக்கள் தலைவர் காமராஜர் தனது 72வது வயதில் 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி மரணம் அடைந்தார்.

எளிமையின் மறுபக்கம் காமராஜர் :

Kamarajar history in tamil -ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவர் இறக்கும் வரை வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். மேலும் அவரிடம் கதர் ஆடைகள் மட்டும் தான் இருந்தன.

மேலும் அவரது வங்கிக் கணக்கில் கூட டெபாசிட் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் தனக்காகச் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், அத்தகைய தலைவர் அரிதாகவே இருப்பார்கள் .